ஈகையும் நாவும் · குறுங்கோழியூர் கிழார்
திணை: வாகை · துறை: அரசவாகை · பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
தூங்கு கையான் ஓங்கு நடைய,உறழ் மணியான் உயர் மருப்பின,பிறை நுதலான் செறல் நோக்கின,பா வடியால் பணை எருத்தின,தேன் சிதைந்த வரை போல,மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து,அயறு சோரூம் இருஞ் சென்னிய,மைந்து மலிந்த மழ களிறுகந்து சேர்பு நிலைஇ வழங்கப்:பாஅல் நின்று கதிர் சோரும்வான உறையும் மதி போலும்மாலை வெண் குடை நீழலான்,வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க,அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த‘ஆய் கரும்பின் கொடிக் கூரை,சாறு கொண்ட களம் போல,வேறு வேறு பொலிவு தோன்றக்குற் றானா உலக் கையால்;கலிச் சும்மை வியல் ஆங்கண்பொலம் தோட்டுப் பைந் தும்பைமிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்,சின மாந்தர் வெறிக் குரவைஓத நீரில் பெயர்பு பொங்க;வாய் காவாது பரந்து பட்டவியன் பாசறைக் காப் பாள!வேந்து தந்த பணி திறையாற்சேர்ந் தவர் கடும்பு ஆர்த்தும்,ஓங்கு கொல்லியோர், அடு பொருந!வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!வாழிய, பெரும! நின் வரம்பில் படைப்பே!நிற் பாடிய அலங்கு செந்நாப்பிற்பிறர் இசை நுவ லாமை,ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!‘மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடேபுத்தேள் உலகத்து அற்று’ எனக் கேட்டு, வந்துஇனிது காண்டிசின்: பெரும! முனிவிலை,வேறுபுலத்து இறுக்கும் தானையோடுசோறுயட நடத்தி; நீ துஞ்சாய் மாறே!
திணை: வாகை · துறை: அரசவாகை · பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை