திருத்தணிகை
திருத்தணிகை · ராகம் ஹம்ஸாநந்தி · தாளம் மிஸ்ரசாபு (3 1/2)
தான தத்தன தான தத்தனதான தத்தன தான தத்தனதான தத்தன தான தத்தன ...... தந்ததானஏது புத்திஐ யாஎ னக்கினியாரை நத்திடு வேன வத்தினிலேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்றேயி ருக்கவு நானு மிப்படியேத வித்திட வோச கத்தவரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்பாதம் வைத்திடை யாதே ரித்தெனைதாளில் வைக்கநி யேம றுத்திடில்பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்யாரெ டுப்பதெ னாவெ றுத்தழபார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோஓத முற்றெழு பால்கொ தித்ததுபோல எட்டிகை நீசமுட்டரையோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவேஓத மொய்ச்சடை யாட வுற்றமர்மான்ம ழுக்கர மாட பொற்கழலோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வேமாதி னைப்புண மீதி ருக்குமைவாள்வி ழிக்குற மாதி னைத்தருமார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளேமாரன் வெற்றிகொள் பூமு டிக்குழலார்வி யப்புற நீடு மெய்த்தவர்வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.
திருத்தணிகை · ராகம் ஹம்ஸாநந்தி · தாளம் மிஸ்ரசாபு (3 1/2)
Thiruthani · ragam ஹம்ஸாநந்தி · thalam மிஸ்ரசாபு (3 1/2)