குறிஞ்சிப்பாட்டு
அடிகள் 131–140 · கபிலர்
முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலிதிளையாக் கண்ண வளைகுபு நெரிதரநடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியாமிடும்பைகூர் மனத்தே மருண்டுபுலம் படரமாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலத்தாகாண் விடையி னணிபெற வந்தெமலமர லாயிடை வெரூஉத லஞ்சிமெல்லிய வினிய மேவரக் கிளந்தெமைம்பா லாய்கவி னேத்தி யண்டொடியசைமென் சாய லவ்வாங் குந்தி
பார்க்கின்ற சினத்தால் செருக்கி, தம் மேல் ஒன்று நெருங்குந்தோறும் கோபிக்கும், மூங்கில் முளை போலும் ஒளியையுடைய பற்களையும் பெரிய உகிரையும் உடைய நாய், இமையாக் கண்களையுடையதாய் எம்மை வளைத்துக்கொண்டு மேலே மேலே வருகையினாலே, யாம் நடுங்கி எழுந்து, நல்லடி தளர்ந்து, வருத்தம் மிக்க மனத்தையுடையேமாய் மயங்கி வேற்றுப் புலத்து ஏறச் செல்லாநிற்க, தனக்கு மாறாகிய விடைகளையெல்லாம் பொருது கெடுத்த மனச்செருக்கினையுடைய, தான் அறியாத நிலத்தில் புதிய ஆவைக் காணும் ஏறு போல அழகு பெற வந்து, யாங்கள் போகின்ற பொழுது எம்மனத்தில் சுழற்சியால் வெருவுதற்குத் தான் அஞ்சி, மெல்லியவாய் இனியவாய் இருக்கின்ற சொற்களை எமக்குப் பொருந்த வரச் சொல்லி, எம்முடைய ஐவகைப்பட்ட மயிரினையுடைய பலரும் ஆராய்ந்த அழகைப் புகழ்ந்து —
The dog, proud in its looking anger, raging the closer anything comes to it, with teeth shining like a bamboo shoot and great claws, circles us with eyes that never blink and presses on and on; and we start up trembling, our feet failing, our hearts full of pain, and wander in confusion into another field. Then he comes, beautiful as a bull that has beaten down every rival and comes into a strange field to see new cows; and seeing that we are afraid of the turning of our own minds as we go, he speaks soft kind words that come to fit us, and praises the beauty that many have looked at in our five-fold hair —
இந்தக் காட்சியில் பயம் மிக முக்கியம்: நாய் துரத்துகிறது, பெண்கள் வேற்றுப் புலத்திற்கு ஓடுகிறார்கள். ஆனால் தலைவன் அங்கே வந்து இனிய சொற்கள் சொல்கிறான்.
அதாவது பயம் ஒரு சந்திப்பை உருவாக்குகிறது. காட்டின் ஆபத்தே காதலை நிகழ்த்துகிறது. இது குறிஞ்சி நிலத்தின் இயல்பு: ஆபத்தும் காதலும் ஒரே இடத்தில்.
Fear is central here: the dog chases, the women run into another field. And the lover arrives there with soft words.
Fear creates the meeting. The forest's danger is what makes love happen. That is the hill country's nature: danger and love in the same place.
அடிகள் 131–140 · கபிலர்
Lines 131–140 · Kapilar
பயம் காதலுக்கு வழி வகுக்கிறது — இது தற்செயலா, அல்லது காட்டின் இயல்பா?
Does fear make a way for love — by chance, or because that is the forest's nature?