பாலை · போதனார்
மனைமருட்சி மகள்நிலை உரைத்ததூஉம் ஆம்
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திபுடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்றுஅரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடிஏவல் மறுக்கும் சிறு விளையாட்டிஅறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்கொண்ட கொழுநன் குடி வறன் உற்றெனகொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்ஒழுகு நீர் நுணங்கு அறல் போலபொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே
Pirasam kalantha ven suvaith theempaal / Viri kathirp porkalaththu oru kai aenthi / Putaippin surrum poon thalais siru koal / Un enru oakkupu pizhaippa then neer / Muththu arip porsilampu olippath thaththurru / Ari naraik koonthar sem muthu seviliyar / Pari melinthu ozhiya panthar oati / Aeval marukkum siru vilaiyaatti / Arivum ozhukkamum yaantu unarnthanalkol / Konta kozhunan kuti varan urrena / Kotuththa thanthai kozhunj soaru ullaal / Ozhuku neer nunangku aral poala / Pozhuthu maruththu unnum siru mathukaiyalae
மனைமருட்சி மகள்நிலை உரைத்ததூஉம் ஆம்