poem 347 · Purananuru · Many poets

புறநானூறு 347 · வேர் துளங்கின மரனே · கபிலர்

உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சிலநாஇடைப் ப·றேர் கோலச் சிவந்தஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை,எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்.மணநாறு மார்பின், மறப்போர் அகுதைகுண்டுநீர் வரைப்பின், கூடல் அன்னகுவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப,. . . . . . . . . . . . . .என்னா வதுகொல் தானே? . .. . .விளங்குறு பராரைய வாயினும், வேந்தர்வினைநவில் யானை பிணிப்ப,வேர்துளங் கினநம் ஊருள் மரனே.
Share
கதை

வேர் துளங்கின மரனே · கபிலர்

திணை: காஞ்சி · துறை: மகட்பாற் காஞ்சி