ஊர்க்கு அணங்காயினள் · மதுரை மருதனிள நாகனார்
திணை: காஞ்சி · துறை: மகட்பாற் காஞ்சி
நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்,கடிய கூறும், வேந்தே; தந்தையும்,நெடிய அல்லது, பணிந்துமொழி யலனே;இ·துஇவர் படிவம்; ஆயின், வைஎயிற்று,அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை,மரம்படு சிறுதீப் போல,அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே.
திணை: காஞ்சி · துறை: மகட்பாற் காஞ்சி