தாராது அமைகுவர் அல்லர் · மதுரைப் படைமங்க மன்னியார்
திணை: காஞ்சி · துறை: மகட்பாற் காஞ்சி
படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்,கொடிநுடங்கு மிசைய தேரும், மாவும்,படைஅமை மறவரொடு, துவன்றிக் கல்லெனக்,கடல்கண் டன்ன கண்அகன் தானைவென்றுஎறி முரசின் வேந்தர், என்றும்,வண்கை எயினன் வாகை அன்னஇவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்;என்ஆ வதுகொல் தானே- தெண்ணீர்ப்பொய்கை மேய்ந்த செவ்வரி நாரைதேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின்,காமரு காஞ்சித் துஞ்சும்ஏமம்சால் சிறப்பின், இப் பணைநல் லூரே?
திணை: காஞ்சி · துறை: மகட்பாற் காஞ்சி