Song 292 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 292 · திருத்தணிகை

தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதன ...... தனதானமுகிலு மிரவியு முழுகதிர் தரளமுமுடுகு சிலைகொடு கணைவிடு மதனனுமுடிய வொருபொரு ளுதவிய புதல்வனு ...... மெனநாடிமுதிய கனனென தெய்வதரு நிகரெனமுதலை மடுவினி லதவிய புயலெனமுகமு மறுமுக முடையவ னிவனென ...... வறியோரைச்சகல பதவியு முடையவ ரிவரெனதனிய தநுவல விஜயவ னிவனெனதபனன் வலம்வரு கிரிதனை நிகரென ...... இசைபாடிச்சயில பகலவ ரிடைதொறு நடைசெயுமிரவு தவிரவெ யிருபத மடையவெசவித அடியவர் தவமதில் வரவருள் ...... புரிவாயேஅகில புவனமு மடைவினி லுதவியஇமய கிரிமயில் குலவரை தநுவெனஅதிகை வருபுர நொடியினி லெரிசெய்த ...... அபிராமிஅமரு மிடனன லெனுமொரு வடிவுடையவனி லுரையவன் முதுதமி ழுடையவனரியொ டயனுல கரியவ னடநவில் ...... சிவன்வாழ்வேதிகிரி நிசிசரர் தடமுடி பொடிபடதிரைக ளெறிகடல் சுவறிட களமிசைதிரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் ...... பெருகாறாச்சிகர கிரிநெரி படபடை பொருதருள்திமிர தினகர குருபர இளமயில்சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் ...... பெருமாளே.
Share
கதை

திருத்தணிகை

திருத்தணிகை

A story

Thiruthani