பாடல் 10277 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 180 / 358
கோதாவரியையும் சீதையைப் பிரிந்த இடத்தையும் இராமன் சீதைக்குக் காட்டுதல்
கம்பராமாயணம் 10277 · மீட்சிப் படலம்
போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும்,சூது ஆர் முலைத்தோகையை நோக்கி, ‘முன் தோன்று சூழல்கோதாவிரி; மற்று அதன் மாடு உயர் குன்று நின்னைப்பேதாய்! பிரிவித்து உயர் பீழை பிணித்தது ‘என்றான்.