பாடல் 10331 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 234 / 358
கம்பராமாயணம் 10331 · மீட்சிப் படலம்
‘ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழிவாழ்பெருநிலத்துப் பெறல் அரும் இன் உயிர்க்கருவும் மாண்டு அறக் காணுதியோ? கலைத்தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்!