பாடல் 10472 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · திரு முடி சூட்டுப் படலம் · பாடல் 17 / 42

பரதன் அவ்வாறே நாயகக் கோயில் புகுதல்

கம்பராமாயணம் 10472 · திரு முடி சூட்டுப் படலம்

என்றலும் இறைஞ்சி, மற்றைத் துணைவர்கள் யாவரோடும்சென்றனன் எழுந்து, மாடம் பல ஒரீஇ, உலகில் தெய்வப்பொன் திணிந்து அமரரோடும் பூமகள் உறையும் மேருக்குன்று என விளங்கித் தோன்றும் நாயகக் கோயில் புக்கான்.
பகிர்