பாடல் 2709 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் · பாடல் 32 / 44
இந்திரன் தன்னுலகு சென்றமை
கம்பராமாயணம் 2709 · சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்
இன்னன பல நினைந்து ஏத்தினன் இயம்பாத்'துன்னுதல் இடை உளது 'என நனி துணிவான் ,தன் நிகர் முனிவனைத் 'தர விடை 'என்னாப்பொன் ஒளிர் நெடு முடிப் புரந்தரன் போனான் .