பாடல் 3423 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · சடாயு உயிர் நீத்த படலம் · பாடல் 8 / 225
கம்பராமாயணம் 3423 · சடாயு உயிர் நீத்த படலம்
'' இடைந்துபோய் நிசிசரற்கு , இராமன் , எவ்வம் வந்துஅடைந்த போது அழைக்குமே ? அழைக்குமாம் எனின் ,மிடைந்த பேர் அண்டங்கள் , மேல , கீழன ,உடைந்து போம் ; அயன் முதல் உயிரும் வீயுமால் ''