பாடல் 4901 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · கடல் தாவு படலம் · பாடல் 50 / 94
கம்பராமாயணம் 4901 · கடல் தாவு படலம்
கொடு நாலொடு இரண்டு குலப்பகை, குற்றம் மூன்றும்,சுடு ஞானம் வெளிப்பட, உய்ந்த துயக்கு இலார்போல்,விடம் நாகம் முழைத்தலை விம்மல் உழந்து, வீங்கி,நெடுநாள் பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப!