பாடல் 5421 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · உருக் காட்டு படலம் · பாடல் 83 / 118
கம்பராமாயணம் 5421 · உருக் காட்டு படலம்
அயர்த்தவர் அரிதில் தேறி, ஆண்தொழில் தாதைக்கு ஆண்டுச்செயத்தகு கடன்கள் யாவும் தேவரும் மருளச் செய்தார் :'கயத்தொழில் அரக்கன்தன்னை நாடி நாம் காண்டும் 'என்னாப்புயல் தொடு குடுமிக் குன்றும் கானமும் கடிது போனார்.