சுந்தர காண்டம் · பிணி வீட்டு படலம் · பாடல் 129 / 139
மற்று இனிப் பல என்? வேலை வட அனல், புவி அளாய கற்றை வெம் கனலி, மற்றைக் காயம் தீ, முனிவர் காக்கும் முற்றுறு மும்மைச் செந்தீ, முப்புரம் முருங்கச் சுட்ட கொற்றவன் நெறறிக் கண்ணின் வன்னியும், குளிர்ந்த அன்றே.
அண்டமும் கடந்தான் அம் கை அனலியும் குளிர்ந்தது; அங்கிக்குண்டமும் குளிர்ந்த; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த; கொற்றச்சண்ட வெம் கதிர ஆகித் தழங்கு இருள் விழுங்கும் தாவு இல்மண்டலம் குளிர்ந்த; மீளா நரகமும் குளிர்ந்த மாதோ.