பாடல் 6296 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் மந்திரப் படலம் · பாடல் 96 / 115
கம்பராமாயணம் 6296 · இராவணன் மந்திரப் படலம்
சிந்த மா நாகரைச் செரு முருக்கிய கரன், திரிசிரத்தோன்,முந்தமான் ஆயினான், வாலியே முதலினோர் முடிவு கண்டால்,அந்த மான் இடவனோடு ஆழிமா வலவனும் பிறரும், ஐயா!இந்த மானிடவராம் இருவரோடு எண்ணலாம் ஒருவர் யாரே?