பாடல் 6708 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இலங்கை வேள்விப் படலம் · பாடல் 65 / 74
அனுமன் அரக்கனை அழித்தது
கம்பராமாயணம் 6708 · இலங்கை வேள்விப் படலம்
காய்த்த அக்கணத்து அரக்கர்தம் உடல் உகு கறைத் தோல்,நீத்த எக்கரின், நிறைந்துள; கருங்கடல் நெருப்பின்வாய்த்த அக்கனை, வரிசிலை மலையொடும் வாங்கி,தேய்த்த அக் குழம்பு உலர்ந்தில, இலங்கையின் தெருவில்.