இராமனது கேட்ட வீடணனும் சுக்கிரீவனும் இலக்குவனும் தத்தம் கருத்தினைத் தெரிவித்தல்
கம்பராமாயணம் 7103 · அங்கதன் தூதுப் படலம்
அரக்கர் கோன் அதனைக் கேட்டான், ‘அழகிற்றே யாகும் ‘என்றான்;குரங்கு இனத்து இறைவன் நின்றான், ‘கொற்றவற்கு உற்றது ‘என்றான்;‘இரக்கமது இழுக்கம் ‘என்றான், இளையவன்; ‘இனி, நாம் அம்புதுரக்குவது அல்லால், வேறு ஓர் சொல் உண்டோ? ‘என்னச் சொன்னான்.