யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 238 / 255
தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றி,பேரும் ஓர் இடம் இன்று எனத் திசைதொறும் பிறங்கி,காரும் வானமும் தொடுவன பிணக் குவை கண்டான்,மூரி வெஞ்சிலை இராவணன் அரா என முனிந்தான்.