பாடல் 7449 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 51 / 363

வீரர்கள் கும்பகருணனைத் துயிலெழுப்பச் சங்கு தாரை முதலியவற்றால் ஒலி எழுப்புதல்

கம்பராமாயணம் 7449 · கும்பகருணன் வதைப் படலம்

‘இங்கு இவன் தன்னை யாம் இன்றுஎழுப்பல் ஆம் வகை ஏது? ‘என்று,துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு,மெய் துணுக்கம் உற்றார்;அங்கைகள் தீண்ட அஞ்சி,ஆழ் செவி அதனினூடு,சங்கொடு தாரை, சின்னம்,சமைவுறச் சாற்றலுற்றார்.
பகிர்