பாடல் 8428 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 296 / 300
இராவணன் வீரமொழி
கம்பராமாயணம் 8428 · நாகபாசப் படலம்
ஏத்தருந் தடந்தோள் ஆற்றல் என்மகன் எய்த பாசம்காற்றிடைக் கழித்துத் தீர்த்தான், கலுழன் ஆம்; காண்மின், காண்மின்!வார்த்தை ஈது ஆயின், நன்றால், இராவணன் வாழ்ந்த வாழ்க்கை!மூத்தது கொள்கை போலாம்? என்னுடை முயற்சி எல்லாம்.