பாடல் 8714 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 142 / 231
அரக்கருடைய படைக் கடலினிடையே அங்கதன் முதலியோர் ஒருவரையொருவர் காணமுடியாத நிலையில் சேய்மையில் நிற்றல்
கம்பராமாயணம் 8714 · பிரமாத்திரப் படலம்
வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின்யோசனை ஏழு சென்றான் அங்கதன்; அதனுக்கு அப்பால்ஆசையின் இரட்டி சென்றான் அரிகுலத்து அரசன்; அப்பால்ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான்.