பாடல் 9173 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நிகும்பலை யாகப் படலம் · பாடல் 104 / 183

கம்பராமாயணம் 9173 · நிகும்பலை யாகப் படலம்

தீ ஒப்பன, உரும் ஒப்பன, உயிர் வேட்டன திரியும்பேய் ஒப்பன, பசி ஒப்பன, பிணி ஒப்பன, பிழையாமாயக் கொடுவினை ஒப்பன; மனம் ஒப்பன, கழுகின்தாய் ஒப்பன, சில வெங்கணை துரந்தான் துயில் துறந்தான்.
பகிர்