யுத்த காண்டம் · இந்திரசித்து வதைப் படலம் · பாடல் 52 / 71
இலக்குவன் விடுத்த அம்பு இந்திரசித்தின் தலையை யறுத்துத் தள்ளுதல்
நேமியும், குலிச வேலும், நெற்றியின் நெருப்புக் கண்ணான்நாம வேல் தானும், மற்ற நான்முகன் படையும், நாண,தீ முகம் கதுவ ஓடிச் சென்று, அவன் சிரத்தைத் தள்ளி,பூமழை அமரர் சிந்த, பொலிந்தது அப் பகழிப் புத்தேள்.