பாடல் 19 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை குறம் 19 · எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

புல்வாயின் பார்வையைவெம் புலிப்பார்வை யிணங்கும்புதுத்தினைகல் லுரற்பாறை முன்றிறொறு முணங்கும்கல்விடரில் வரிவேங்கை கடமானோ டுறங்கும்கருமலையில் வெள்ளருவி கறங்கிவழிந் திறங்கும்சில்வலையும் பலவாரு முன்னிறப்பிற் றூங்கும்சிறுதுடியும் பெருமுரசுந் திசைதொறுநின் றேங்கும்கொல்லையின்மான் பிணையுமிளம் பிடியும்விளை யாடும்குறிச்சியெங்கள் குறச்சாதி குடியிருப்ப தம்மே.
பகிர்