பாடல் 435 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

முதல் திருமுறை · திருவாழ்கொளிபுத்தூர் (*) · பாடல் 7 / 11

திருவாழ்கொளிபுத்தூர் (*) · 1.40.7

அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து வழிதலை யங்கையி லேந்தி உடலிடு பிச்சை யோடைய முண்டி யென்று பலகூறி மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் தடமல ராயின தூவி தலைவன தாள்நிழல் சார்வோம்.
பகிர்