பாடல் 822 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருவெங்குரு · பாடல் 7 / 11
திருவெங்குரு · 1.75.7
வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை மறுகிட வருமத களிற்றினை மயங்கஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல் கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப நலிந்திட லுற்று வந்தவக் கருப்புவில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.