பாடல் 2146 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருப்பாசூர் · பாடல் 7 / 11
திருப்பாசூர் · 2.60.7
கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னிஎண்ணுந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும்பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே.