பாடல் 2412 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருநனிபள்ளி · பாடல் 6 / 11

திருநனிபள்ளி · 2.84.6

மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து மலையான் மடந்தை மணிபொன் ஆகமோர் பாகமாக அனலாடு மெந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் ஊகமோ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப அகிலுந்தி யொண்பொன் இடறி நாகமோ டாரம்வாரு புனல்வந் தலைக்கும் நனிபள்ளி போலு நகர்காள்.
பகிர்