பாடல் 2409 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருநனிபள்ளி · பாடல் 3 / 11
திருநனிபள்ளி · 2.84.3
பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடி லாத பெருமான்கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை யிடமாய காதல் நகர்தான்வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் விடுபோ தலர்ந்த விரைசூழ்நறுமலர் அல்லிபல்லி ஒலிவண் டுறங்கும் நனிபள்ளி போலு நமர்காள்.