அபிடேகம் செய்துகொள்ளும் இராமன் சீதையோடிருந்த தோற்றம்
கம்பராமாயணம் 10491 · திரு முடி சூட்டுப் படலம்
மரகதச் சயிலம் செந்தாமரை மலர்க் காடு பூத்து,திரைகெழு கங்கை வீசும் திவலையான் நனைந்து, செய்யஇருகுழை தொடரும் வேற்கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப,பெருகிய செவ்வி கண்டார், பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார்.