யுத்த காண்டம் · திரு முடி சூட்டுப் படலம் · பாடல் 34 / 42
மாதவர் முதலியோர் அபிடேகம் செய்தல்
மாதவர், மறைவலாளர், மந்திரக் கிழவர் மற்றும்மூதறிவாளர் உள்ள சான்றவர் முதல் நீர் ஆட்ட,சோதியான் மகனும் மற்றைத் துணைவரும், அனுமன் தானும்,தீது இலா இலங்கை வேந்தும் பின் அபிடேகம் செய்தார்.