யுத்த காண்டம் · அணி வகுப்புப் படலம் · பாடல் 9 / 28
இராவணன் மலரணையை விட்டெழுந்து மந்திராலோசனை மண்டபத்தில் அமர்தல்
மா அணை நீலக் குன்றத்து இளவெயில் வளர்ந்தது என்ன,தூ அணை குருதிச் செக்கர்ச் சுவடு உறப் பொலிந்த தோளான்,ஏ அணை வரிவில் காமன் கணைபட எரியா நின்றபூ அணை ஆற, வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான்