அங்கதன் சென்று அழைக்கப் படைத்தலைவர் மட்டும் நின்று தாம் அஞ்சியோடியதற்குரிய காரணங் கூறுதல்
கம்பராமாயணம் 9471 · மூலபல வதைப் படலம்
சென்று தானையை உற்றனன், 'சிறை சிறை கெடுவீர்!நின்று கேட்டபின் நீங்குமின் ' எனச் சொல்லி நேர்வான்;'ஒன்றும் கேட்கிலம் 'என்றது அக் குரக்கு இனம், உரையால்வென்றி வெந்திறல் படைப்பெருந் தலைவர்கள் மீண்டார்.