பாலகாண்டம் · பூக்கொய் படலம் · பாடல் 17 / 39
புலவி நுணுக்கம்
செம்மாந்த தெங்கின் இளம் நீர் ஐ ஒர் செம்மல் நோக்கி'அம்மா! இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்' என்ன,'எ மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன ?' என்று, ஓர் ஏழைவிம்மா, வெதும்பா, வெயரா முகம், வெய்து உயிர்த்தாள்.