பாடல் 871 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · எழுச்சிப் படலம் · பாடல் 56 / 82

இரவும் பகலும் ஒருசேர உளவாயின எனல்

கம்பராமாயணம் 871 · எழுச்சிப் படலம்

குடையொடு களிறும், தொங்கல் குழாங்களும், கொடியின் காடும்,இடை இடை மயங்கி எங்கும் வெளி கரந்து இருளைச் செய்யப்,படைகளும் முடியும் பூணும் படர் வெயில் பரப்பிச் செல்ல,இடை ஒரு கணம் அத்தின் உள்ளே இரவு உண்டு பகலும் உண்டு ஏ!
பகிர்