யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 199 / 231
இராமன் ஆற்றொணாத் துயருற்று உணர்வு ஒடுங்குதல்
பொருமினான், அகம்; பொங்கினான்; உயிர் முற்றும் புகைந்தான்;குரு மணித் திருமேனியும், மனம் எனக் குலைந்தான்;தருமம் நின்று தன் கண் புடைத்து அலமரச் சாய்ந்தான்;உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான்.