பாடல் 691 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 128 / 157
சுனச்சேபனுக்குக் கோசிகன் விடைகொடுத்தல்
கம்பராமாயணம் 691 · மிதிலைக் காட்சிப் படலம்
அரசனோடு ஏகி, யூபம் அத்துஅணைக்குபு, இம் மறையை ஓதின்,விரசுவர் விண் உளோரும்விரிஞ்சனும் விடை வலோனும்;உரை செறி வேள்வி முற்றும்;உன் உயிர்க்கு ஈறு உண்டாகாபிரசம் மென் தாராய்! என்னப்,பழிச்சொடும் பெயர்ந்து போனான்.