பாடல் 2847 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருப்பூந்தராய் · பாடல் 1 / 11
பண் · காந்தாரபஞ்சமம்
திருப்பூந்தராய் · 3.2.1
பந்துசேர்விர லாள்பவ ளத்துவர் வாயினாள்பனி மாமதி போல்முகத் தந்தமில்புக ழாள்மலைமாதொடும் ஆதிப்பிரான் வந்துசேர்விடம் வானவ ரெத்திசை யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர் புந்திசெய்திறைஞ் சிப்பொழிபூந்தராய் போற்றுதுமே.