பாடல் 3700 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருவீழிமிழலை - திருவிராகம் · பாடல் 2 / 11
திருவீழிமிழலை – திருவிராகம் · 3.80.2
பட்டமுழ விட்டபணி லத்தினொடு பன்மறைகள் ஓதுபணிநற்சிட்டர்கள் சயத்துதிகள் செய்யவருள் செய்தழல்கொள் மேனியவனூர்மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்விட்டுலவு தென்றல்விரை நாறுபதி வேதியர்கள் வீழிநகரே.