பாடல் 3701 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருவீழிமிழலை - திருவிராகம் · பாடல் 3 / 11
திருவீழிமிழலை – திருவிராகம் · 3.80.3
மண்ணிழி சுரர்க்குவளம் மிக்கபதி மற்றுமுள மன்னுயிர்களுக்கெண்ணிழிவில் இன்பநிகழ் வெய்தஎழி லார்பொழில் இலங்கறுபதம்பண்ணிழிவி லாதவகை பாடமட மஞ்ஞைநட மாடஅழகார்விண்ணிழி விமானமுடை விண்ணவர் பிரான்மருவு வீழிநகரே.