பாடல் 6686 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை · திருப்பழனம் - திருத்தாண்டகம் · பாடல் 9 / 10
திருப்பழனம் – திருத்தாண்டகம் · 6.36.9
நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே நேரிழையை யொருபாகம் வைத்தார் தாமேபூண்டரவைப் புலித்தோல்மே லார்த்தார் தாமே பொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமேஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே அங்கங்கே சிவமாகி நின்றார் தாமேபாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே.