பாடல் 6368 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் · பாடல் 7 / 10

திருவீரட்டானம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.5.7

மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றிவிண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத் துரிமூடும் விகிர்தா போற்றிபண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி பார்முழுது மாய பரமா போற்றிகண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி.
பகிர்