பாடல் 7043 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் · பாடல் 9 / 10

திருவலஞ்சுழியும் – திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் · 6.73.9

தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய் தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய்இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய் எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய்குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
பகிர்