நூல் 9 / 10 · ஒன்பது புலவர்கள்

சேதிராயர் திருவிசைப்பா

Sethirayar · சேதிராயர்

10 பாடல்கள்; சேதிராயர் பாடிய பதிகம்.

Ten verses by Sethirayar.

பகிர்

அறிமுகம்

சேதிராயர் பாடிய பத்துப் பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன; இப்பதிகத்திற்கும் தனிப் பதிகத் தலைப்பு இல்லை.

Introduction

Ten verses by Sethirayar, again without a separate shrine heading in the source.

பாடல்களும் பொருளும் The verses and their meaning

1 பாடல் 279
சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்சால நாள்அயன் சார்வதி னால்இவள்வேலை யார்விடம் உண்டுகந் தீர்என்றுமால தாகும்என் வாணுதுலே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
2 பாடல் 280
வாணு தற்கொடி மாலது வாய்மிகநாணம் அற்றனள் நான்அறி யேன்இனிச்சேணு தற்பொலி தில்லையு ளீர்உமைகாணில் எய்ப்பிலள் காரிகையே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
3 பாடல் 281
காரி கைக்(கு)அரு ளீர்கரு மால்கரிஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகுகீரி யல்தில்லை யாய்சிவ னே என்றுவேரி நற்குழலாள் இவள்விம்முமே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
4 பாடல் 282
விம்மி விம்மியே வெய்துயிர்த்(து) ஆளெனாஉம்மை யேநினைந்(து) ஏத்துமொன்(று) ஆகிலள்செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள்அம்மல் ஓதி அயர்வுறுமே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
5 பாடல் 283
அயர்வுற்(று) அஞ்சலி கூப்பி அந்தோஎனைஉயவுன் கொன்றையுந் தார்அருளாய்எனும்செயலுற் றூர்மதில் தில்லையு ளீர்இவண்மயலுற் றாள்என்றன் மாதிவளே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
6 பாடல் 284
மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பன்என்(று)ஓதில் உய்வன்ஒண் பைங்கிளி யேஎனும்சேதித் தீர்சிரம் நான்முக னைத்தில்லைவாதித் தீர்என்மடக் கொடியையே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
7 பாடல் 285
கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம்பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம்இடியச் செஞ்சீலை கால்வளைத் தீர்என்றுமுடியும் நீர்செய்த மூச்சறவே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
8 பாடல் 286
அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகியமறவ னேஎனை வாதைசெய் யேல்எனும்சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும்பிறைகு லாம்நுதற் பெய்வளையே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
9 பாடல் 287
அன்ற ருக்கனைப் பல்லிறுத்(து) ஆனையைக்கொன்று காலனைக் கோளிழைத் தீர்எனும்தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள்ஒன்றும் ஆகிலள் உம்பொருட்டே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
10 பாடல் 288
ஏயு மா(று)எழில் சேதிபர் கோன்தில்லைநாய னாரை நயந்துரை செய்தனதூய வாறுரைப் பார்துறக் கத்திடைஆய இன்பம்எய் தியிருப்பரே. 10
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
கதை

சேதிராயர் திருவிசைப்பா

சேதிராயர் திருவிசைப்பா

சிந்தனைக்கு

சிறிய பதிகம், பெரிய பக்தி.

To reflect on

A short decade, a large devotion.