நூல் 4 / 10 · ஒன்பது புலவர்கள்

பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

Poonthuruthi Nambi Kadamnambi · பூந்துருத்தி நம்பி காடநம்பி

12 பாடல்கள்; திருவாரூரும் சிதம்பரமும்.

12 verses on Thiruvarur and Chidambaram.

பகிர்

அறிமுகம்

பூந்துருத்தி நம்பி காடநம்பி பாடிய பன்னிரண்டு பாடல்கள் இரண்டு பதிகங்களாக அமைந்துள்ளன — திருவாரூரும், “முத்து வயிரமணி” எனத் தொடங்கும் சிதம்பரப் பதிகமும்.

Introduction

Poonthuruthi Nambi Kadamnambi’s twelve verses form two decades: Thiruvarur, and a Chidambaram decade opening “muthu vayiramani”.

பாடல்களும் பொருளும் The verses and their meaning

1 பாடல் 183
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்துகழுத்திலோர் தனிவடங் கட்டிமுக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன்முரிவதோர் முரிவுமை அளவும்தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோதம்மொருப் பாடுல கதன்மேல்மிக்கசீர் ஆருர் ஆதியாய் வீதிவிடங்கராய் நடம்குலா வினரே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
2 பாடல் 184
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்பருகுதோ(று) அமுதம்ஒத் தவர்க்கேதித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம்திருவுரு இருந்தவா பாரீர்சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்ததனிமுழு முதலுமாய் அதற்கோர்வித்துமாய் ஆருர் ஆதியாய் வீதிவிடங்கராய் நடம்குலா வினரே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
3 பாடல் 185
முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல்தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப்எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லைஅத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
4 பாடல் 186
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதேமுடியாமுத் தீவேள்வி முவாயி ரவரொடும்குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
5 பாடல் 187
அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச்செல்ல நெறிவகுத்த சேவகனே ! தென்தில்லைக்கொல்லை விடையேறி கூத்தா(டு) அரங்காகச்செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
6 பாடல் 188
எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்(டு) எமையாளும்சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட் கொண்டருளிஅம்பந்து கண்ணாளும் தானும் அணிதில்லைச்செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
7 பாடல் 189
களையா உடலோடு சேரமான் ஆருரன்விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ளமுளையா மதிசூடி மூவா யிரவரொடும்அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
8 பாடல் 190
அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப்புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதேபுவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்க்சிவலோகம் ஆவதுவும் தில்லைச் சிற் றம்பலமே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
9 பாடல் 191
களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல்அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்பஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும்தெளிகொண்ட தில்லைச் சிற் றம்பலமே சேர்ந்தனையே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
10 பாடல் 192
பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில்நாடகத்தின் கூத்தை நயிற்றுமலர் நாடோறும்ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
11 பாடல் 193
உருவத்(து) எரியுருவாய் ஊழிதோ றெத்தனையும்பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்தஇரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து)அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
12 பாடல் 194
சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்தன்ஆடல் அதியசத்தை ஆங்கறித்து பூந்துருத்திக்காடன் தமிழ் மாலை பத்தும் கருத்தறிந்துபாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே. 10திருச்சிற்றம்பலம்
சொற்பொருள், சிந்தனை, பகிர்வு
கதை

திருவாருர்

பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா · திருவாருர்

சிந்தனைக்கு

சுருக்கமான பன்னிரண்டு பாடல்களில் இரண்டு பெருந்தலங்கள்.

To reflect on

Two great shrines in a brief twelve verses.