ஏகநா யகனை இமையவர்க்(கு) அரசைஎன்னுயிர்க்(கு) அமுதினை எதிரில்போகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப்பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்தமேகநா யகனை மிகுதிரு வீழிமிழலைவிண் ணிழிசெழுங் கோயில்யோகநா யகனை அன்றிமற் றொன்றும்உண்டென உணர்கிலேன் யானே.
அறிமுகம்
சேந்தனாரின் முப்பத்துநான்கு பாடல்கள் மூன்று பதிகங்களாக அமைந்துள்ளன — திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி. ஒவ்வொரு பதிகமும் அத்தலத்து இறைவனின் பெயரை முகவரியாகக் கொண்டு முடிகிறது.
Introduction
Senthanar’s thirty-four verses form three decades, on Thiruveezhimizhalai, Thiruvavaduthurai and Thiruvidaikkazhi. Each decade closes on the name of the Lord of that shrine.
பாடல்களும் பொருளும் The verses and their meaning
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்கரையிலாக் கருணைமா கடலைமற்றவர் அறியா மாணிக்க மலையைமதிப்பவர் மனமணி விளக்கைச்செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத்திருவீழி மிழலைவீற் றிருந்தகொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம்குளிரஎன் கண்குளிர்ந் தனவே.
மண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்தமருந்தைஎன் மாறிலா மணியைப்பண்டவர் அயன்மாற்(கு) அரிதுமாய் அடியார்க்(கு)எளியதோர் பவளமால் வரையைவிண்டவர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்திருவீழி மிழலையூர் ஆளும்கொண்டலங் கண்டத்(து) எம்குரு மணியைக்குருகவல் வினைகுறு காவே.
தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்தசசிகுவா மவுலியைத் தானேஎன்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றிஎழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்குவெண் பளிங்கின்பொன்னடிக்(கு) அடிமை புக்கினப் போகவிடுவனோ பூண்டுகொண் டேனே.
இத்தெய்வ நெறிநன் றென்(று)இருள் மாயப்பிறப்பா இந்திர சாலப்பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்தபுராணசிந்தா மணி வைத்தமெய்த் தெய்வ நெறிநான் மறையவர் வீழிமிழலைவிண் ணிழிசெழுங் கோயில்அத்தெய்வ நெறியிற் சிவமலா(து) அவமும்அறிவரோ அறிவுடை யோரே.
அக்கனா அனைய செல்வமே சிந்தித்துஐவரோ(டு) அழுந்தியான் அவமேபுக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்டபுனிதனை வனிதைபா கனைஎன்திக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழிமிழலையான் திருவடி நிழற்கீழ்ப்புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்பொடியணிந்(து) அடிமைபூண் டேனே.
கங்கைநீர் அரிசிற் கரையிரு மருங்கும்கமழ்பொழில் தழுவிய கழனித்திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்மாடநீ டுயர்திரு வீழித்தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றிநம்பியைத் தன்பெருஞ் சோதிமங்கையோர் பாகத்(து) என்னரு மருந்தைவருந்திநான் மறப்பனோ? இனியே.
ஆயிரம் கமலம் ஞாயி(று)ஆ யிரம்முக்கண்முக கரசர ணத்தோன்பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்தபடர்சடை மின்னுபொன் முடியோன்வேயிருந் தோளி உமைமண வாளன்விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்போற்றுவார் புரந்தரா திகளே.
எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்எண்ணில்பல் கோடிதிண் தோள்கள்எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்எண்ணில்பல் கோடி எல்லைக்(கு)அப் பாலாய்நின்(று)ஐஞ்ஞாற்(று) அந்தணர் ஏத்தும்எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழிஇவர்நம்மை ஆளுடை யாரே.
தக்கன்வெங் கதிரோன் சலந்தரன் பிரமன்சந்திரன் இந்திரன் எச்சன்மிக்கநெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன்மறலிவேள் இவர்மிகை செகுத்தோன்திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழிமிழலையான் திருவடி நிழற்கீழ்ப்புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்பொடியணிந்(து) அடிமைபூண் டேனே.
உளங்கொள மதுரக் கதிர்விரித்(து) உயிர்மேல்அருள்சொரி தரும்உமா பதியைவளங்கிளர் நதியும் மதியமும் சூடிமழவிடை மேல்வரு வானைவிளங்கொளி வீழி மழலைவேந் தேயென்(று)ஆந்தனைச் சேந்தன்தா தையையான்களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்கைக்கொண்ட கனககற் பகமே.
பாடலங் காரப் பரிசில்கா(சு) அருளிப்பழுத்தசெந் தமிழ்மலர் சூடிநீடலங் காரத்து எம்பெரு மக்கள்நெஞ்சினுள் நிறைந்துநின் றானைவேடலங் காரக் கோலத்தின் அமுதைத்திருவீழி மிழலையூர் ஆளும்கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்கெழுமுதற்(கு) எவ்விடத் தேனே.
பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர்மெய்யே திருப்பணி செய்சீர் மிகுகா விரிக்கரை மேயஐயா ! திருவா வடுதுறை அமுதே ! என்றுன்னை அழைத்தக்கால்மையார் தடங்கண் மடந்தைக்(கு)ஒன்(று) அருளாது ஒழிவது மாதிமையே.
மாதி மணங்கம ழும்பொழில் மணிமாட மாளிகை வீதிசூழ்சோதி மதிலணி சாந்தைமெய்ச் சுருதி விதிவழி யோர்தொழும்ஆதி அமரர் புராணனாம் அணிஆ வடுதுறை நம்பிநின்றநீதி அறிகிலன் பொன்நெடும் திண்தோள் புணர நினைக்குமே.
நினைக்கும் நிரந்தர னே !என்னும்நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர் !மனக்கின்ப வெள்ளம் மலைமகள்மணவாள நம்பிவண் சாந்தையூர்தனக்கின்பன் ஆவடு தண்துறைத்தருணேந்து சேகரன் என்னுமே.
தருணேந்து சேகர னே !எனும்தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்பொருள்நேர்ந்த சிந்தை அவர்தொழப்புகழ்செல்வம் மல்குபொற் கோயிலுள்அருள்நேர்ந்(து) அமர்திரு மாவடுதுறையாண்ட ஆண்டகை அம்மானேதெருள்நேர்ந்த சித்தம் வலியவாதிலக நுதலி திறத்திலே.
திலக நுதல்உமை நங்கைக்கும்திருவா வடுதுறை நம்பிக்கும்குலக அடியவர்க்(கு) என்னையாட்கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்அவதொன்(று) அறிகின்றி வேம்எனும்அணியும்வெண் ணீ(று)அஞ் செழுத்தலால்வலதொன் றிலள்இதற்(கு) என்செய்கேன்?வயலந்தண் சாந்தையர் வேந்தனே !
வேந்தன் வளைத்தது மேருவில்அரவுநாண் வெங்கணை செங்கண்மால்போந்த மதிலணி முப்புரம்பொடியாட வேதப் புரவித்தேர்சாந்தை முதல் !அயன் சாரதிகதியருள் என்னும் இத் தையவைஆந்தண் திருவா வடுதுறையான்செய்கை யாரறி கிற்பாரே?
கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்(கு)எழுந்தோ டிக்கெட்ட அத்தேவர்கள்சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்என்சொல்லிச் சொல்லும் இத் தூமொழிகற்போல் மனம்கனி வித்தஎங்கருணால யாவந்திடாய் என்றால்பொற்போ பெருந்திரு வாவடுதுறையாளி பேசா(து) ஒழிவதே.
ஒழிவொன்றி லாவுண்மை வண்ணமும்உவப்பிலள் ஊறின்ப வெள்ளமும்ஒழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும்முனிகோடி கோடியா மூர்த்தியும்அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர்அணிஆ வடுதுறை ஆடினாள்இழிவொன்றி லாவகை எய்திநின்(று)இறுமாக்கும் என்னிள மானனே.
மானேர் கலைவளையும் கவர்ந்துளம்கொள்ளை கொள்ளவழக்(கு) உண்டே !தேனே ! அமுதே !என் சித்தமே !சிவலோக நாயகச் செல்வமே !ஆனேஅ லம்புனற் பொன்னிஅணியா வடுதுறை அன்பர்தம்கோனே !நின் மெய்யடி யார்மனக்கருத்தை முடித்திடுங் குன்றமே !
குன்றேந்தி கோகன கத்(து)அயன்அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்என்றேங்கி ஏங்கி அழைக்கின்றாள்இளவல்லி எல்லை கடந்தனள்அன்றோ லம்புபு னற்பொன்னிஅணியா வடுதுறை ஆடினாள்நன்றே இவள்தம் பரமல்லள்நவலோக நாயகன் பாலளே.
பாலும் அமுதமும் தேனுமாய்ஆனந்தம் தந்துள்ளே பாலிப்பான்போலும்என் ஆருயிர்ப் போகமாம்புரகால காமபு ராந்தகன்சேலும் கயலும் திளைக்குநீர்த்திருவா வடுதுறை வேந்தனோ(டு)ஆலும் அதற்கே முதலுமாம்அறிந்தோம் அரிவைபொய் யாததே.
மாலுமா மனம்தந்(து) என்கையில் சங்கம்வல்வினான் மலைமகள் மதலைவேலுலாந் தேவர் குலமுழு தாளும்குமரவேள் வள்ளிதன் மணாளன்சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றவேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்என்னும் என் மெல்லியல் இவளே.
இவளைவா ரிளமென் கொங்கையீர் பொங்கஎழில் கவர்ந் தான்இளங் காளைகவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க்கனகக்குன் றெனவரும் கள்வன்திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றகுவளைமா மலர்க்கண் நங்கையானைக்கும்குழகன்நல் அழகன்நங் கோவே.
கோவினைப் பவளக் குழமணக் கோலக்குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன்காவல்நற் சேனையென் னக்காப் பவன்என்பொன்னை மேகலை கவர்வானே?தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றதூவிநற் பீலி மாமயில் ஊரும்சுப்பிர மண்ணியன் தானே.
தானவர் பொருது வானவர் சேனைமடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளைமறைநிறை சட்டறம் வளரத்தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றகோனமர் கூத்தன் குலவிளங் களிறென்கொடிக்கிடர் பயப்பதுங் குணமே !
குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தைபடுமிடர் குறிக்கொளா(து) அழகோ?மணமணி மறையோர் வானவர் வையம்உய்யமற்(று) அடியனேன் வாழத்திணமணி மாடத் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றகணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்கணபதி பின்னிளங் கிளையே.
கிளையிளங் சேயக் கிரிதனை கீண்டஆண்டகை கேடில்வேற் செல்வன்வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலைகார்நிற மால்திரு மருகன்திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றமுளையிளங் களி(று)என் மொய்குழற் சிறுமிக்(கு)அருளுங்கொல் முருகவேள் பரிந்தே.
பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோபவளத்தின் குழவியோ பசும்பொன்சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோசுந்தரத்(து) அரசிது என்னத்தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றவரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்மையல்கொண்(டு) ஐயறும் வகையே.
வகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞைவானமர் விளைத்ததா ளாளன்புகைமிகும் அனலிற் பரம்பொடி படுத்தபொன்மாலை வில்லிதன் புதல்வன்திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றதொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என்துடியிடை மடல்தொடங் கினளே.
தொடங்கினள் மடவென்(று) அணிமுடித் தொங்கல்புறஇதழ் ஆகிலும் அருளான்இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்மறத்தொழில் வார்த்தையும் உடையன்திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றமடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து)அறுமுகத்(து) அமுதினை மருண்டே.
மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்வெருண்டமான் விழியார்க்(கு) அருள்செயா விடுமேவிடலையே எவர்க்கும் மெய் அன்பர்தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றகுருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்கண்ணுடைக் கோமளக் கொழுந்தே.
கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்தூய்மொழி அமரர்கோ மகனைச்செழுந்திரள் சோதிச் செப்புறைச் சேந்தன்வாய்ந்தசொல் இவைசுவா மியையேசெழுந்திடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்திருக்குரா நீழற்கீழ் நின்றஎழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்இடர்கெடும் மாலுலா மனமே. 122திருச்சிற்றம்பலம்
திருவீழிமிழலை
சேந்தனார் திருவிசைப்பா · திருவீழிமிழலை
சிந்தனைக்கு
தலம் தோறும் இறைவனைத் தேடும் பக்தி, பதிகத்தின் முடிவில் அவன் பெயரிலேயே நிற்கிறது.
To reflect on
The search for the Lord from shrine to shrine comes to rest in his name at the close of each decade.