verse 76 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 76 · மாசித(று) இருக்கை

களி(று)உடைப் பெரும்சமம் ததைய எஃ(கு)உயர்த்(து)ஒளிறுவாள் மன்னர் துதைநிலை கொன்றுமுரசுகடிப்(பு) அடைய அரும்துறை போகிப்பெரும்கடல் நீந்திய மரம்வலி உறுக்கும்பண்ணிய விலைஞர் போலப் புண்ஒரீஇப்பெரும்கைத் தொழுதியின் வன்துயர் கழிப்பிஇரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்(கு)ஈதல் தண்டா மாசித(று) இருக்கைகண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டுகருவி வானம் தண்தளி சொரிந்தெனப்பல்விதை உழவின் சில்ஏ ராளர்பனித்துறைப் பகன்றைப் பாங்(கு)உடைத் தெரியல்கழு(வு)உறு கலிங்கம் கடுப்பச் சூடிஇலங்குகதிர்த் திருமணி பெறூஉம்அகன்கண் வைப்பின் நாடுகிழ வோயே.
Share
கதை

மாசித(று) இருக்கை

எட்டாம் பத்து · அரிசில்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: பெருஞ்சேரல் இரும்பொறை · செந்துறைப் பாடாண்பாட்டு