பாலை · குடவாயிற்கீரத்தனார்
பிரிவிடை வேறுபட்டதலைமகட்குத் தோழி சொல்லியது. · குடவாயிற்கீரத்தனார் பாடியது
நள்ளென் கங்குல் நடுங்குதுணை யாயவர்நின்மறந் துறைதல் யாவது 1புல்மறந்துஅலங்கல் வான்கழை உதிர்நெல் நோக்கிக்கலைபிணை விளிக்குங் கானத் தாங்கண்கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்தாழிமுதல் கலித்த கோழிலைப் பருத்திப்பொதிவயிற்று இளங்காய் பேடை ஊட்டிப்போகில்பிளந் திட்ட 2பொங்கல் வெண்காழ்நல்கூர் பெண்டிர் 3அல்கல் கூட்டும்கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்பக்கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர்செருப்புடை அடியர் தெண்சுனை மண்டும்அருஞ்சுரம் அரிய வல்ல வார்கோல்திருந்திழைப் பணைத்தோள் தேன்நாறு கதுப்பின்குவளை உண்கண் இவளொடு செலற்கெனநெஞ்சுவாய் அவிழ்ந்தனர் காதலர்அஞ்சில் ஓதி ஆயிழை நமக்கே.
பிரிவிடை வேறுபட்டதலைமகட்குத் தோழி சொல்லியது. · குடவாயிற்கீரத்தனார் பாடியது